மயில்சாமி இறந்ததும் குடும்பம் இப்படி ஆகிப்போச்சே.... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மருமகள்!

வியாழன், 13 ஜூலை 2023 (12:42 IST)
மறைந்த  பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றில் நடுவராகவும் பங்களித்துள்ளார். மேலும், நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம், காஞ்சனா, வீரம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.
 
சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதராக இருந்து வந்துள்ளார். மாரடைப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் மயில்சாமி இறந்துவிட்டார். இவரது இறப்பு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக பல்வேறு காமெடி நடிகர்களுக்கு பெரும் உதவி செய்துவந்துள்ளார். 
 
இந்நிலையில் மயில்சாமி இறந்தபின்னர் அவரது குடும்பம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறதாம். ஆம், மயிலசாமியின் மருமகள் விவாகரத்து வேண்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். காரணம், மயில்சாமியின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் அன்பு சரியாக குடும்பத்தை நடத்தவில்லையாம். இதனால் குடும்பத்தில் பல பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. எனவே அதை சமாளிக்க முடியவில்லை என கூறி கணவர் அன்புவிடம் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்திற்கு சென்றுள்ளாராம் ஐஸ்வர்யா. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்