ட்ரம்ப் இனிமேல் ட்விட்டரை யூஸ் பண்ணலாம்..! – எலான் மஸ்க் அறிவிப்பு!

Webdunia
புதன், 11 மே 2022 (11:14 IST)
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இனி ட்விட்டரை பயன்படுத்தலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ட்விட்டரில் இட்ட பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதனால் அவரது ட்விட்டர் கணக்கை முடக்கிய ட்விட்டர் நிறுவனம், அவரது ஆதரவாளர்கள் சிலரது கணக்கையும் முடக்கியது.

மேலும் டொனால்ட் ட்ரம்ப் இனி ட்விட்டரில் செயல்பட முடியாது என ட்விட்டர் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உறுதியாக கூறினார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.

இனி டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் தளத்தில் சுதந்திரமாக செயல்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்