இலங்கை அதிபர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தியதாகவும், இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமாராவுக்கு, டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் இன்று அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை இலங்கை அதிபர் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கை-இந்திய உறவுகளை பயன்படுத்துவது, மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு இலங்கை அதிபர் செல்ல இருப்பதாகவும், இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.