அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவிக்காலம் முடிகிறது.. அடுத்த தலைவர் யார்?

Mahendran

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (10:56 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 3 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைய ஏற்பதாக கூறப்படும் நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக பாஜக தலைவர் பதவி ஏற்று அரசியலுக்கு வந்தார்.

அண்ணாமலை தலைமையில் தான் பாஜக ஓரளவு தமிழகத்தில் வளர்ச்சி அடைந்தது என்பதும், தீவிரமாக அவர் கட்சியை வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மூன்று ஆண்டுக்கு தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலையின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் அடுத்த பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் கூறப்படும் நிலையில் இரண்டாவது முறையாகவும் அண்ணாமலை தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் அவர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் அவரை எதிர்த்து மூத்த தலைவர்கள் யாராவது போட்டியிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேசிய தலைமையின் நம்பிக்கை அண்ணாமலைக்கு பல மடங்கு இருப்பதால், அண்ணாமலையை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்