மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

Siva

புதன், 18 டிசம்பர் 2024 (16:49 IST)
மணிப்பூரில் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சாதனங்கள் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இரு பிரிவை சேர்ந்தவர்கள் நடத்தும் தாக்குதல் காரணமாக ஏராளமான உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மணிப்பூரில் கிளர்ச்சியாளர்களை தேடும் வேட்டையில் இருக்கும் பாதுகாப்பு படையினர் சில ஆயுதங்களை கைப்பற்றி உள்ளதாகவும், அந்த ஆயுதங்களில் ஒன்றில் ஸ்டார்லிங்க் சின்னம் இருப்பதாக எக்ஸ் தள பயனாளர் ஒருவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், இந்தியாவின் மேல் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் செயல்படாது என்றும், இது பொய்யான தகவல் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு உரிமம் இல்லாத நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு மட்டும் எப்படி ஸ்டார்லிங்க் சாதனங்கள் கிடைத்தது என்பது புதிராகவே இருப்பதாக சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்