என்ன கொடும சார் இது..! முட்டையில் அடிவாங்கிய பிரான்ஸ் அதிபர்!?

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:11 IST)
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானை பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஆசாமி ஒருவர் முட்டையால் அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரான்சில் உள்ள லியோனில் சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவருக்கு பின்னாலிருந்து ஆசாமி ஒருவர் அவரை முட்டையால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டையால் அடித்த நபரை போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

முன்னதாக இதுபோல ஜூன் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நபர் ஒருவர் அதிபர் மெக்ரானை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில மாதங்களில் பிரான்ஸ் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்