ஏற்கனவே கெட்டு கெடக்குறது போதாதா? எழுந்த எதிர்ப்புகள்! – இன்ஸ்டாக்ராம் கிட்ஸ் நிறுத்தம்!

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:48 IST)
சிறுவர்களுக்கான இஸ்ண்டாக்ராம் செயலியை உருவாக்குவதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்த நிலையில் தற்போது இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக செயலிகளில் இன்ஸ்டாகிராம் முக்கியமானதாக உள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனமான இன்ஸ்டாகிராமில் பலரும் புகைப்படங்கள், வீடியோக்கள் அப்லோட் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியை சிறுவர்களும் பயன்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம் கிட்ஸ் என்ற புதிய செயலி உருவாக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் மார்க் ஸுக்கெர்பெர்க் அறிவித்தார். ஆனால் ஏற்கனவே சமூக செயலிகளால் இளைஞர்கள் கெட்டு கிடக்கும் நேரத்தில் சிறுவர்களையாவது விட்டுவைக்கக் கூடாதா என்ற ரீதியில் பல வகையிலும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதனால் இந்த புதிய செயலி திட்டத்தை நிறுத்துவதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்