பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (13:02 IST)
பப்புவா நியூ கினியாவில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூபிரிட்டன் தீவில் இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் என அனைத்தும் குழுங்கின. இதனால் மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
 
இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பசபிக் கடல் பகுதியை ஒட்டி சுமார் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரையில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்க கூடும் என பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்