பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% குறைக்க முடிவு!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (23:20 IST)
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,. மின்  விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு,  பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பொருளாதார சீரழிவு ஏற்பட்டு வருகிறது என்றும் அந்நாடு திவால் ஆகும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றும் உலக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 255 என்ற அளவில் வீழ்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐக்கிய அமீரகத்திடம் உதவி கேட்டுள்ள நிலையில், தற்போது சர்வதேச நிதியத்திடமும் உதவி கேட்டுள்ளது பாகிஸ்தான்.

மேலும்,பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தேசிய சிக்கனக் குழுவை அமைத்துள்ளார், அதன்படி, அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10% குறைக்கவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்