ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் ஒத்திவைப்பு: ரிசர்வ் வங்கி தகவல்!
செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:10 IST)
இந்திய ரிசர்வ் வங்கி 10 லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன்களை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள வங்கிகள் சுமார் 10 லட்சம் கோடி அளவிலான வாராக்கடன்களை ஒத்திவைத்து உள்ளதாகவும் இதில் 13 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இந்த தகவல் பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாராக்கடன்களை முழுமையாக வசூலித்து இருந்தால் சுமார் 61 சதவீதம் நிதி பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் வாராக்கடன்களை வசூல் செய்ய ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.