காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரத்தில் மனித உடல்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:10 IST)
காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்கள் மற்றும் மனித உடலின் பாகங்கள் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் பிடித்ததை அடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர் என்பதும் சமீபத்தில் விமானத்தைப் பிடிப்பதற்காக விமானத்தின்  படிக்கட்டுகளிலும் சக்கரங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தனர் என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்கள் மற்றும் மனித உடலின் பாகங்கள் இருந்ததாக மற்றும் விமானப்படை தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
காபூலில் இருந்து அமெரிக்க விமானம் புறப்பட்ட போது நூற்றுக்கணக்கானோர் ஓடுதளத்தில் திரண்டு விமானத்தில் ஏற முயற்சித்தனர். சில விமானத்தின் படிகளை பிடித்துக்கொண்டும் சக்கரங்களை பிடித்துக்கொண்டும் தொங்கியபடி பயணம் செய்தனர் என்பதும் அதில் மூன்று பேர் கீழே விழுந்து பலி ஆனார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று கத்தாரில் அந்த விமானம் இறங்கியபோது விமானத்தின் சக்கரங்களில் மனித உடல் மற்றும் மனித உடலின் பாகங்கள் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்