வங்கதேசத்தில் கரையை கடந்தது 'ஹமூன்' புயல்: மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

புதன், 25 அக்டோபர் 2023 (10:49 IST)
வங்க கடலில் உருவான 'ஹமூன்' புயல் வங்கதேசத்தில் கரையை கடந்து விட்டதாகவும் இதனை அடுத்து வங்கதேச மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  
 
மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்து தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 'ஹமூன்'  என்ற புயலாக மாறியது. இந்த புயல் இன்று காலை ஐந்து முப்பது மணி நிலவரப்படி வங்கதேசத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. 
 
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து சற்றுமுன் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  புயல் கரையை கடந்தாலும் இன்று மாலை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த நிலையில் புயல் காரணமாக 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்