திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா? என்ன ஆச்சு?

வியாழன், 19 அக்டோபர் 2023 (17:04 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், பந்து வீசிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஒன்பதாவது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்ட்யாதிடீரென கணுக்கால் காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார் 
 
ஹர்திக் பாண்ட்யா மூன்று பந்துகள் மட்டுமே வீசியிருந்த நிலையில் மீதமுள்ள மூன்று பந்தங்களை விராட் கோலி வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கதேச அணி சற்றுமுன் வரை 39 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்