உலகத்தை கிடுகிடுக்க வைத்த கொரோனா: ஒரே நாளில் 2,300 பலி!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (08:46 IST)
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டதாக அறிவித்த சீனாவிலும் கொரோனா பாதித்தோர் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 3,163 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் சீனாவை விட இத்தாலியும், ஸ்பெயினும் வேகமாக உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றன. நேற்று ஒரு நாளில் இத்தாலியில் 683 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 656 பேர் உயிரிழந்ததால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டது. மெல்ல பிரான்ஸும் உயிரிழப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் பிரான்ஸில் 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நேற்று ஒருநாளில் மட்டும் உலகம் முழுவதும் 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று 19,000 ஆக இருந்த பலி எண்ணிக்கை ஒரே நாளில் 21,000-ஐ தாண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்