கொரோனாவால் நுரையீரல் மட்டுமல்ல… இந்த உறுப்பும் பாதிக்குமாம்! அதிர்ச்சித் தகவல்!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (09:04 IST)
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் பிரச்சனையால அவதிப்படுகின்றனர். இப்போது இந்த வைரஸால் நுரையீரல் மட்டுமல்லாது சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுபற்றி சர்வதேச சிறுநீரக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘5 முதல் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் 'அக்கியுட் கிட்னி இன்ஜுரி' எனும் கடுமையானக் காயம் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் சிறுநீரில் கூடுதலான அளவு ரத்தத்தையும் புரதத்தையும் கசிய செய்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.

இந்த தகவலானது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்