இந்நிலையில் கேரளாவில் முதன் முதலாக கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட குடும்பத்தினர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியைச் சோந்தவா் தாமஸ் ஆபிரகாம் (93). இவரது மனைவி மரியம்மா (88). இவர்கள் தங்கள் குடும்பத்தினர் 5 பேரோடு கடந்தமாதம் கேரளாவுக்கு திரும்பினர். அவர்களை வீட்டில் தனிமையில் இருக்க சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தினார்.
ஆனால் அதை மீறி அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இதனால் இவர்கள் மூலமாகவே கேரளாவில் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அக்குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அனைவரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள தம்பதிகளின் பேரன் மருத்துவக் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.