10 மாதமாக தொடர்ந்து கொரோனா தொற்று… 44 ஆவது சோதனையில் நெகட்டிவ்வான நபர்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (21:01 IST)
இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 10 மாதத்தில் 43 தடவை கொரோனா சோதனை செய்யப்பட்ட போதும் பாசிட்டிவ் எனவே முடிவு வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேவ் ஸ்மித் என்பவர் 72 வயது ஓட்டுனர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டு விட்டாரா என்று சோதனை செய்த போதெல்லாம் அவருக்கு பாஸிட்டிவ் என்றே வந்துள்ளது.

43 முறை அதுபோல வந்த நிலையில் 44 ஆவது முறையாக நெகட்டிவ் என வந்து முழுமையாக குணமாகியுள்ளார். குணமான அவர் தான் பிழைப்பேன் என நினைக்கவே இல்லை என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்