இதனால் அந்த வீடியோவை நீக்க டிவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அதை நீக்கவில்லை. இந்நிலையில் உத்தரபிரதேச போலிஸார் டிவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதுகுறித்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிமன்றம் மனீஷ் மகேஷ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் காணொளி மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.