பாராட்டுகளைக் குவிக்கும் வித்யாபாலனின் ஷெர்னி!

வியாழன், 24 ஜூன் 2021 (20:43 IST)
வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை வித்யா பாலன் இப்போதெல்லாம் மிகவும் சிறப்பான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் அவர் நடிப்பில் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் ஷெர்னி (பெண் புலி) காட்டில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு வழி மாறிவிடும் ஒரு புலியால் மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள்.

அந்த புலியை ட்ராக் செய்து மீண்டும் வனப்பகுதிக்கே அனுப்ப வனக்காவலர்கள் மற்றும் அங்கிருக்கும் பழங்குடி இன மக்கள் நடத்தும் போராட்டமே கதை. இடையில் அதை வைத்து நடக்கும் அரசியல் மாய்மாலங்கள், வன விலங்குகளை வேட்டையாடும் மனிதத் தன்மையற்ற செயல் என மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குனர் அமித் மாஸுர்கர். இந்த படம் இப்போது அமேசான் ப்ரைமில் பலராலும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்