இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில் கூகுளின் (CEO) சுந்தர் பிச்சை, இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் போன்ற தமிழர்களின் அறிவும், திறமையும் உலகளவில் உச்சத்தில் உள்ள வேளையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழர் அல்லாமல் கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது என்றார்.
துணைவேந்தர் பதிவிக்காக விண்ணப்பித்திருந்த 170 பெயர்களில், எம்.கே.சூரப்பா தான் தகுதியானவர் என்பதை தமிழக கவர்னர் எப்படி முடிவு செய்தார். கவர்னர், சூரப்பாவின் துணைவேந்தர் நியமனத்தை திரும்பப்பெறாவிட்டால் 18-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.