வில்லங்கத்துக்கு விலை கொடுத்த கோடீஸ்வரர்! - கான்ஜூரிங் பேய் வீடு கோடிகளில் ஏலம்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:48 IST)
கான்ஜூரிங் பட பிரபல பேய் வீட்டை கோடீஸ்வரர் ஒருவர் பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

ஹாலிவுட் பேய் படங்களில் மிகவும் பிரபலமான படங்களில் முக்கியமானது கான்ஜூரிங். பல்வேறு அமானுஷ்ய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளியாகி வரும் இந்த படவரிசையின் முதல் பாகத்தை ஜேம்ஸ் வான் இயக்கியிருந்தார். இந்த படம் ஹாலிவுட் அமானுஷ்ய படங்களின் திருப்புமுனையாக கருதப்படுகிறது.

இந்த படத்தில் காட்டப்பட்ட அமானுஷ்ய வீடு அமெரிக்காவின் ரோடே ஐலேண்டில் உள்ளது. இந்த படத்திற்கு பின் அந்த பண்ணை வீடு மிகவும் பிரபலமான நிலையில் சமீபத்தில் இந்த வீட்டை ஏலத்துக்கு விற்றனர். இந்த வீட்டை தொழிலதிபர் ஜென் ஹெய்ன்சன் என்பவர் இந்திய மதிப்பில் ரூ.8 கோடியே 85 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். இந்த வீட்டை புணரமைத்து சுற்றுலா தளமாக மாற்ற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் பலர் சந்திரமுகி முருகேஷ் கணக்காக “வெள்ளையடிச்சு வெளிய இருக்கத மறைச்சிடலாம். உள்ள நடக்குறத மறைக்க முடியுமா?” என்பது போல கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்