சூடான் நாட்டில் உள்ள தெற்கு மாகாணத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 220 பேர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூடான் நாட்டின் தெற்கு புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹவுசா என்ற பிரிவைச் சேர்ந்த மக்களுக்கும், வேறு சில குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், இடம் பகிர்வு செய்ததில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், இரு பிரிவினருக்கும் கடந்த வாரம் சண்டையிட்டுக்கொண்டனர். இந்தச் சண்டையில் சுமார் 170 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இதுவரை சுமார் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், இந்த மாகாண கவர்னர் இப்பகுதியில் 30 நாட்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.