கவர்ச்சி புகைப்படங்களை விற்பனை செய்து கோடீஸ்வரி ஆன கல்லூரி மாணவி

Webdunia
புதன், 6 மே 2020 (07:55 IST)
கவர்ச்சி புகைப்படங்களை விற்பனை செய்து கோடீஸ்வரி ஆன கல்லூரி மாணவி
கொரோனா லாக்டவுன் நேரத்தில் உலகம் முழுவதும் பொதுமக்கள் வேலை இன்றி வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கோடிக்கணக்கில் ஆன்லைனில் சம்பாதித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது 
 
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைனில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அந்த புகைப்படங்களை டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் வேண்டும் என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார் 
 
இதனையடுத்து அவரை ஃபாலோ செய்யும் மில்லியன் கணக்கானோர் கல்லூரி மாணவியின் கவர்ச்சியான புகைப்படத்தை காசு கொடுத்து டவுன்லோட் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த கல்லூரி மாணவி கடந்த மூன்று மாதத்தில் மட்டும் கவர்ச்சி படங்களை டவுன்லோட் செய்ய அனுமதித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து உள்ளதாகவும் இந்த பணத்தில் இங்கிலாந்து நாட்டின் முக்கிய இடத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீடு வாங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த பிசினஸ் எனக்கு நன்றாக சென்று கொண்டிருப்பதால் இதே பிசினஸை தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் தனது ஆதரவு அளித்து கொண்டிருக்கும் தன்னுடைய ஃபாலோயர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய கவர்ச்சி படங்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்