பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் பாதிப்பு: பேப்பர் பாட்டிலுக்கு மாறும் கோகோ கோலா

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:19 IST)
உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான கோகோ கோலா பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு அடைந்து தற்போது முன்மாதிரியாக பேப்பர் பாட்டிலை அறிமுகம் செய்ய இருக்கிறது 
 
இது குறித்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் கோகோ-கோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகில் பலர் விரும்பி அருந்தும் குளிர்பானமாக கொக்கோகோலா சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது 
 
பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக இயற்கை சுற்றுச்சூழல் படு பாதகமான சூழ்நிலையை ஏற்பட்டுள்ளதால் இனிமேல் பிளாஸ்டிக் பாட்டிலை பயன் படுத்த கூடாது என கோலா நிறுவனம் முடிவு செய்து உள்ளது. 
 
இதனை அடுத்து மறுசுழற்சி செய்யப்பட்ட காகித பாட்டிலை உபயோகிக்க முடிவு செய்துள்ளது. இந்த காகித பாட்டில் 100% மறுசுழற்சி செய்யக் கூடியது என்பதும் பிளாஸ்டிக் இல்லாத பாட்டிலை உருவாக்குவதே தனது நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் கோலா நிறுவனம் கூறியுள்ளது.  பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு எதிராக கோலா நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்