சசிகலா விடுதலையை கோலாகலமாக்க அமமுகவினர் ஆயத்தம்!!

புதன், 6 ஜனவரி 2021 (15:28 IST)
சசிகலா விடுதலையாவதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்ட வேண்டிய அபராத தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி கட்டிமுடித்துள்ளதால் வரும் 27 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது. 
 
சசிகலா விடுதலையாவதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார் அணிவகுத்து சென்று ஏராளமானோர் வரவேற்க திட்டமிட்டுள்ளனர். எனவே, அந்த பகுதியில் கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய இருமாநில போலீசார்களும் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
 
அதோடு சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அவரது பாதுகாப்பு கருதி கர்நாடக மாநில எல்லைக்குள் தமிழகத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் அனுமதிக்கப்படமாட்டார்கள். 
 
மேலும், கர்நாடக - தமிழக எல்லை பகுதியான ஓசூர் அத்திபள்ளி வரை சசிகலாவை பாதுகாப்பாக கொண்டு செல்ல கர்நாடக அரசு மற்றும் போலீசார் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்