உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதி… அறிமுகப்படுத்திய சீனா!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:52 IST)
சீனாவில் செய்றகை நுன்னறிவு கொண்ட ரோபாவை நீதிபதியாக நியமித்துள்ளனர்.

சீனா இப்போது தொழில்நுட்பத் தளத்தில் படுவேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே முதல் முதலாக செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபாவை வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த ரோபோ 97 சதவீதம் துல்லியமான தீர்ப்புகளைக் கூறும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

கிரெடிட் கார்ட் மோசடி, திருட்டு மற்றும் விபத்து போன்ற வழக்குகளை இதனால் கையாளமுடியும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த ரோபோவுக்கு உள்ளீடாஅ 2015 முதல் 2020 வரையிலான வழக்குகள் மற்றும் தீர்ப்புகளின் தகவல்கள் உள்ளீடாக வழங்கப்பட்டுள்ளனவாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்