ஐஸ்லாந்து நாட்டில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 8 வது மாடியில் வசிக்கும் ஒருவர் தனது குழந்தையை அங்குள்ள பால்கனியில் வைத்து ஆட்டுகிறார்.
அந்த குழந்தை பால்கனியின் விழிம்புக்குச் சென்று திரும்புகிறது. மனதை பதைபதைக்க வைக்கும் இந்த நிகழ்வை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
கடந்து மூன்று தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டார்.அதைப்பார்த்த சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை பால்க்கனியில் வைத்து ஆபத்தான முறையில் ஆட்டுகின்ற தந்தையின் பொறுப்பற்ற தன்மைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்த செய்தியை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.அதில் குழந்தையை பால் கனியில் வைத்து ஆட்டிய நபர், தந்தையாக இருக்கலாமென தெரிவித்துள்ளது.