கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

Siva
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (12:43 IST)
கனடாவின் ஒரு பகுதியில் வன்முறை நிகழ்ந்து கொண்டிருந்த போது, கனடா பிரதமர் இன்னொரு பகுதியில் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் என, கனடா மக்கள் கோபத்துடன் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை, மாண்ட்ரீல் என்ற நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவத்தை நிகழ்த்தினர். அதே நாளில், இன்னொரு பகுதியில் பிரபல பாடகர் ஸ்டார் டைலர் இசை நிகழ்ச்சியில் கனடா பிரதமர் கலந்து கொண்டார். இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது மன்னர் நீரோ கவிதை வாசித்தது போன்றதாக, கனடாவில் ஒரு பக்கம் வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜஸ்டின் ட்ரூடோ இசை நிகழ்ச்சியை பார்த்து வருகிறார் என மக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும், நாட்டின் கடன் ஒரு டிரில்லியன் டாலராக இரட்டிப்பாகி விட்ட நிலையில் அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லாமல் இருக்கிறார். கனடா கண்ட மிக மோசமான பிரதமர் அவர் என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்தாக பரவி வருகிறது.

இந்த சூழலில், இசை நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டது குறித்து விளக்கம் அளித்த அவரது அலுவலகம், இது குடும்ப பயணம் என்றும், மாண்ட்ரியலில் நடந்த வன்முறைக்கு பிரதமர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்