தோர் பெயரில் போலி ஐடி கார்டு: அதிர்ச்சியில் மார்வெல் ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (15:33 IST)
கனடாவில் மார்வெல் திரைப்படங்களில் வரும் காமிக்ஸ் கதாப்பாத்திரத்தின் பெயரில் போலி ஐடிகார்டு தயார் செய்து பொருட்களை வாங்க முயன்ற சம்பவம் வைரலாகி உள்ளது.

மார்வெல் காமிக்ஸ் கதாப்பாத்திரங்களில் முக்கியமானவர் தோர். வைக்கிங் இனத்தவர்களின் கடவுளான தோரை கொஞ்சம் சூப்பர் பவர்களை சேர்த்து உருவாக்கப்பட்டதுதான் மார்வெலின் தோர். உலகமெங்கும் தோர்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் தோராக கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்திருந்தார்.

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் கஞ்சா வாங்குவதற்காக ஒரு இணையதளத்தில் பதிந்துள்ளார். அவர்கள் போட்டோ ஐடி கேட்டிருக்கிறார்கள். அதற்கு கிரிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் தோர் புகைப்படம் அச்சிடப்பட்ட அடையாள அட்டையை வழங்கியிருக்கிறார். மேலும் அதில் தந்தை பெயர் ஓடின்சன் என்றும், விலாசம் 69 பிக் ஹேமர் லேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் அந்த இணைய தளத்தை சேர்ந்த பணியாளருக்கு சிரிப்பு வந்துவிட்டது போலும். உடனடியாக அதை தனது தங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவரது தங்கை அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த மார்வெல் ரசிகர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும். பிறகு தாங்களும் அதை ஷேர் செய்து அதை வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்