பிரிட்டனில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் உறவினர்களுக்கு பதிலாக அவர்களது கட் அவுட்டை வைத்து நடைபெற்ற திருமணம் வைரலாகியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ரோமானி – சாம் ரொண்டேயூ ஸ்மித் காதல் ஜோடிகள் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பிரிட்டனில் திருமண நிகழ்ச்சிகளுக்கு 14 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 100 பேரை அழைத்து திருமண விழா நடத்த திட்டமிட்டிருந்த காதல் ஜோடிகளுக்கு வித்தியாசமான யோசனை தோன்றியுள்ளது. அதன்படி தாங்கள் அழைக்க விரும்பிய நபர்களின் புகைப்படங்களை பெற்று அவற்றை கட் அவுட்டாக செய்து முழுவதுமாக வைத்து திருமண விழாவை நடத்தியுள்ளனர். பிறகு அந்த கட் அவுட்களோடு புகைப்படங்கள் எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்துள்ளனர். இதற்காக 2 லட்சம் ரூபாய் வரை அவர்கள் செலவு செய்துள்ள நிலையில், நூதனமான இந்த திருமணம் வைரலாகியுள்ளது.