மீண்டும் பற்றி எரியும் பெய்ரூட் துறைமுகம்! – லெபனானில் பரபரப்பு!

வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:49 IST)
கடந்த மாதம் லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தின் பாதிப்பே குறையாத நிலையில் மீண்டும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் வெடிப்பொருட்கள் வெடித்த சம்பவம் கடந்த மாதத்தில் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதன் பாதிப்பிலிருந்து மக்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் இயந்திட எண்ணெய்,டயர்கள் வைத்திருந்த கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயை அணைக்கவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் லெபனான் ராணுவம் விரைந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்பு குறித்து இன்னமும் தகவல்கள் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்