சிறுமியுடன் இளைஞர் திருமணம் - சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ !

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (10:24 IST)
ஈரான் நாட்டில் 22 வயது இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரைத் திருமணம் செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஈரானில் பெண்களுக்கான குறைந்தபட்ச வயதாக 13 வயது உள்ளது. 13 வயதைப் பூர்த்தி செய்த பெண்களை (சிறுமிகளை) ஆண்கள் அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஆண்களுக்கென்று எந்த திருமண விதிகளும் இல்லை.

ஏற்கனவே இந்த குறைந்த வயது திருமணத்துக்கு எதிராக அங்கே குரல்கள் எழுந்துள்ள நிலையில் இப்போது 13 வயதிற்கும் கம்மியான வயதுள்ள ஒரு சிறுமிக்கு பெற்றோர் சம்மதத்துடன் மதகுரு திருமணம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த திருமணம் ஈரான் திருமணக் குடும்பசட்டப்பிரிவு 50 படி குற்றம் எனவும் அதனால் திருமணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் மதகுரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்