துபாய் தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சேவுக்கு அனுமதி மறுப்பு - !!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (17:47 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் நிலையில், பிரதமர் ராஜபக்சே, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே  ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அரசின் செயலற்ற தன்மையால் மக்கள் புரட்சியில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடினார். அவர் வெளி நாடு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே, துபாய் செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் வந்த்போது, அவரைப் பார்த்து, வெளியேறும்படி தெரிவித்துள்ளனர். அத்துடன் குடியேற்றத்துறை அதிகாரிகளுடன் பசில் ராஜபக்சே வெளியேற அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்