சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட வங்கி ஊழியர்: 5 பேர் பரிதாப பலி..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (13:47 IST)
அமெரிக்காவில் வங்கி ஊழியர் ஒருவர் தனது சக ஊழியர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள ஓல்ட் நேஷனல் என்ற வங்கியில் 25 வயது இளைஞர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென வங்கியில் நுழைந்த பின்பு சரமாரியாக சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டார். இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் பெண் ஊழியர் ஒருவர் சிகிச்சையின் பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூட்டை தனது சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த வங்கி ஊழியரை காவல்துறையின் கைது செய்ய முற்படும்போது தன்னைத்தானே அவரது துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார். 
 
அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்