HIV மருந்து கொரோனாவுக்கு செட் ஆகுமா? ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (17:41 IST)
மலேரியா மற்றும் ஹெச்ஐவி சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகள் கொண்டு கொரோனா நோயாளிகளை குணமாக்க முடியும் என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை. 
 
உலகம் முழுவதும் கொரோனா பலி 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் உள்ளனர்.
 
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மொடெர்னோ என்ற நிறுவனம் அமெரிக்க சுகாதார மையத்துடன் இணைந்து mRNA – 1273 என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து கொரோனாவை சரிசெய்யுமா என்ற சோதனை இன்று நடக்கிறது. 
இது ஒரு புறம் இருக்க, மலேரியா மற்றும் ஹெச்ஐவி சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகளை கொண்டே கொரோனா நோயாளிகளை குணமாக்க முடியும் என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஆம்,  ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மற்றும் ஹெச்ஐவி சிகிச்சைக்கு தரப்படும்  மருந்துகளை தனித்தனியாகவும், இரண்டையும் சேர்த்துக் கொடுத்தும் ஆய்வு நடத்த உள்ளனர். 
 
இந்த ஆய்வு வெற்றிப்பெற்றால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்