80 வயதிலும் விமானப்பணிப் பெண் வேலை!!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (15:10 IST)
80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக சோர்வின்றி பேட்டே நாஷ் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்டஸ் பணியாற்றி வருகிறார். 


 
 
அமெரிக்காவில், தனது 21-வது வயதில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் (தற்போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்) ஏர் ஹோஸ்ட்டஸ் ஆக நுழைந்தவர், பேட்டே நாஷ்.
 
அதே நிறுவனத்தில் இன்னும் விமானப் பெண்ணாக இன்முகத்துடன் பணியாற்றிவரும் இவருக்கு வயது 80. பணி ஓய்வைப்பற்றி சிந்தித்துப் பார்க்க நேரமில்லை என்கிறார் நாஷ்.
 
வாஷிங்டன் நகரில் இருந்து பாஸ்டன் நகருக்கு செல்லும் விமானத்தில் பணியாற்றி வருகிறார். தனது பணிக்காலத்தில் கென்னடி உள்ளிட்ட அமெரிக்க அதிபர்களுக்கு சேவை செய்துள்ளதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
 
இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் பலரை தோழமையுடன் அன்புடன் உபசரிக்கும் இவருக்கு பலர் நண்பர்களாக உள்ளனர். இவர் உடலில் சக்தி இருக்கும் வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
 
இங்கிலாந்து ராணி போல் எனது பணிக்காலத்தில் வைர விழா காணவேண்டும் என்பதே இவரது ஆசையாம்.
 
அடுத்த கட்டுரையில்