தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர், 2024 ஜூன் மாதம் இந்தியாவில் சுமார் 15,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்தது. இது உலகளாவிய பதவி உயர்வு நடவடிக்கையின் ஒரு பகுதி ஆகும். தற்போது இந்நிறுவனத்தின் உலகம் முழுவதிலும் உள்ள கிளைகளில் பணிபுரியும்50,000 பேர் இந்த பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள்.
இந்த தகவலை இந்தியா மண்டலத்தின் மூத்த மேலாளர் அஜய் விஜ், ஊழியர்களுக்கு அனுப்பிய உள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளார். 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 43,000க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெறுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2023 டிசம்பரில், சிலருக்கு அடிப்படை ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டன. ஜூன் முதல் டிசம்பர் வரை, பெரும்பாலான இந்திய ஊழியர்களுக்கு இவ்வாறான ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
பதவி உயர்வு சுழற்சி 2024 செப்டம்பரில், டிசம்பரிலிருந்து ஜூனுக்கு திடீரென மாற்றப்பட்டது. இதன் நோக்கம், வாடிக்கையாளர் செலவுகள் மற்றும் சேவை தேவை பற்றிய தெளிவான பார்வை பெறுவதற்காக என அக்சென்ச்சர் கூறியுள்ளது.
அக்சென்ச்சர் இந்தியாவில் 3,00,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். உலகளவில் 7,74,000 பேர் பணியாற்றுகின்றனர். FY24-இல், நிறுவனம் USD 64.90 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது.