அமெரிக்கா-இந்தியா உறவுகள் சமீபத்தில் சீராக இல்லை. வரி பிரச்சனை, சிந்தூர் படை நடவடிக்கையை பற்றி அமெரிக்கா தன்னால் தான் நடந்தது என்று கூறியது ஆகியவையோடு, இப்போது கிரீன் கார்ட் விதிகளில் புதிய மாற்றம் என, சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன.
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. தற்போது, அமெரிக்க நீதித்துறை கூறிய புதிய கருத்து, ஆயிரக்கணக்கான இந்திய கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு எந்த நேரத்திலும் கிரீன் கார்ட் ரத்து செய்ய அதிகாரம் உண்டு என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது, அந்தக் கார்ட் பெற 10, 20, 30 , 40 வருடங்கள் கடந்திருந்தாலும் பொருட்படுத்தப்படாது என விளக்கம்.
இந்த விவகாரம், நியூஜெர்சியின் இமாம் மொஹம்மத் கதானி என்ற நபருக்கான வழக்கின் பின்னணியில் உருவாயுள்ளது. இவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், அவருக்கான கிரீன் கார்ட் மறுக்கப்பட்டது.
இந்த உத்தரவால் சட்ட நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிரீன் கார்ட் தவிர்த்து, நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளவர்களுக்கும் மட்டுமே விசாரணை நடக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கிரீன் கார்ட் என்பது நிரந்தர உரிமை அல்ல என்பதற்கான ஆவலான உணர்வு, இந்திய சமூகத்திலும் பரவத் தொடங்கியுள்ளது.