ஜெ. விவகாரத்தில் மீண்டும் மோதிக்கொள்ளும் திருநாவுக்கரசர், ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (15:04 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


 
 
இதனையடுத்து திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
 
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் ஜெயலலிதாவின் திடீர் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை புகழ் பெற்ற மருத்துவமனை.
 
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் என அனைவருமா பொய் சொல்கிறார்கள்? அனைவரும் பொய் சொல்கிறார்கள் என நான் நம்பவில்லை. வெள்ளை அறிக்கையோ, கருப்பு அறிக்கையோ வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா? அவரின் மரணம் பற்றிய வதந்திகள் தேவையில்லாதவை என கூறினார்.
 
ஏற்கனவே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்துக்கு தற்காலிக அல்லது பொறுப்பு முதல்வர் வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார். அப்போதும் திருநாவுக்கரசர் ஸ்டாலினுக்கு எதிராகவே பேட்டியளித்திருந்தார்.
 
அடுத்த கட்டுரையில்