சீனாவில் பறவைக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (22:26 IST)
சீனாவில் பறவைக் காய்ச்சலால்  ( எச்3என்8) மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பரவியது. இந்தப் பெருந்தொற்றினால், பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இதன் தாக்கம்  தற்போதும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் பறவைக் காய்ச்சல் ( எச்3என் 8) சமீபத்தில் பரவி வந்த  நிலையில், இத்தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரில் வசித்து வரும் 58 வயது பெண்ணுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பதற்காக அறிகுறிகள் கண்டறியப்பட்டது.

இப்பெண் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இப்பெண் நோய்த்தொற்றுப் பாதிப்பு ஏற்படும் முன்பு, ஒரு கோழிப்பண்ணைக்குச் சென்றதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தற்போதுவரை சீனாவில் பறவைக் காய்ச்சலால்  ( எச்3என்8) 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தொற்றைக் குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்