US Presidential Election Results: கலிஃபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி.. டிரம்புக்கு கடும் சவால்..!

Mahendran
புதன், 6 நவம்பர் 2024 (10:22 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், முதலில் பிரம்மாண்டமான வெற்றியை டொனால்ட் டிரம்ப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முக்கிய மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இதனால் கடும் சவால் இருவருக்கும் இடையே இருந்து வருகிறது.

அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது தரப்பின் பிரதிநிதிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சற்றுமுன் வெளியான தகவல் படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் 205 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக உள்ளன.

கமலா ஹாரிஸ் 205 தொகுதிகளிலும், டிரம்ப் 230 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ள நிலையில், இனி அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு முடிவும் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்