15 மாத குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

Mahendran

செவ்வாய், 29 ஜூலை 2025 (12:02 IST)
ஹைதராபாத் அருகே உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், 15 மாத குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு, தனது காதலனுடன் ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது 15 மாத குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் வந்துள்ளார். பேருந்து நிலையத்தை அடைந்ததும், குழந்தையை அங்கேயே அனாதையாக விட்டுவிட்டு சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளில், அந்தப் பெண்ணின் காதலன் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து காத்திருந்ததும், பின்னர் அந்தப் பெண் குழந்தையை விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
 
இந்த வீடியோவை கண்ட லட்சக்கணக்கான இணைய பயனர்கள், குழந்தையின் தாயின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காவல்துறையினர் தற்போது குழந்தையை தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர். குழந்தையை தவிக்கவிட்டு சென்ற தாயையும், அவரது காதலனையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடித்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்