"என் மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அடிக்கடி அவனை பார்க்கச் செல்வேன். ஆனால், பள்ளி முதல்வர் ஒருநாள் ‘நீங்கள் அடிக்கடி வர வேண்டாம், வருவதை குறைத்துக் கொள்ளுங்கள்’ என அவர் தெரிவித்தார். "அதைப்போல உங்களை நான் அடிக்கடி சந்திக்க வருவேன். நீங்களே என்னை ‘அடிக்கடி வர வேண்டாம், டெல்லியில் கொஞ்ச காலம் இருங்கள்’ என்று சொல்லும் அளவுக்கு, நான் அடிக்கடி வயநாடு தொகுதிக்கு வருவேன்.
ராகுல் காந்தி இங்கு எம்.பி. ஆக இருந்தபோதும், நீங்கள் அவருக்கு மிகவும் நன்றி உடையவராக இருந்தீர்கள். ராகுல் காந்தி தனியாக போராடிய போது, நீங்கள் அவருக்கு துணையாக இருந்தீர்கள்; அவருக்கு அன்பையும் ஆதரவையும் காட்டினீர்கள். தொடர்ந்து வலிமையாக போராடுவதற்கு தைரியத்தையும் அவருக்கு கொடுத்தீர்கள்.
அதுபோல, நானும் உங்களுக்காக போராட விரும்புகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்," என்று பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.