ஈரானை தனிமைப்படுத்த சவுதியுடன் கூட்டு: சாமர்த்தியமாய் காய் நகர்த்தும் டிரம்ப்!

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (15:43 IST)
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய டிரம்ப் அதில் இருந்து ஈரான் மீது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கத்தில் டிரம்ப்பின் செயல்கள் உள்ளன. 
 
ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. இரான், சவுதியை அடுத்து ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
 
ஆனால், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து ஈரானை அகற்ற அமெரிக்கா துடித்து வருகிறது. அதன் முதல் நடவடிக்கையாக சவுதி அரேபியா மூலம் காய் நகர்த்தி வருகிறது. 
 
ஆம, கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து சப்ளை செய்யுமாறு சவுதி அரேபியாவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டு கொண்டுள்ளார். இதன் மூலம், சவுதியிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை வாங்கும் பட்சத்தில் ஈரானின் தேவை குறையும் என டிரம்ப் கணக்கிட்டுள்ளார். 
 
அமெரிக்காவுடன் இணக்கமாக இருப்பதால், சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்