கபடி மாஸ்டர்ஸ்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

வெள்ளி, 29 ஜூன் 2018 (23:06 IST)
கடந்த சில நாட்களாக துபாயில் நடைபெற்று வரும் கபடி மாஸ்டர்ஸ் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று நடந்த விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, தென்கொரிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு நாடுகளின் அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. 
 
இதில் நேற்று இந்தியா, தென்கொரியாவுடன் மோதியது. ஆரம்பத்தில்  இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி வீரர்கள் முதல் பாதியின் முடிவில் 17-10 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தனர். இந்த ஆதிக்கம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்ததால் இறுதியில் இந்திய அணி 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
அதேபோல் பாகிஸ்தான் மற்றும் இரான் அணிகளுக்கு இடையே நடந்த இன்னொரு அரையிறுதி போட்டியில் இரான் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எனவே ஈரான் மற்றும் இந்திய அணிகள் வரும் ஞாயிறு அன்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் போட்டியில் மோதவுள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்