அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

புதன், 27 ஜூன் 2018 (17:25 IST)
இந்தியா, சீனா போன்ற நாடுகளை ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

 
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 
 
அந்த வகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. 
 
அமெரிக்காவின் முடிவு அவ்வளவு எளிதாக எங்களை சர்வதேச எண்ணெய் சந்தையிலிருந்து விலக்கி வைக்க முடியாது. ஒருநாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய் உலக நாடுகளுக்கு ஈரான் ஏற்றுமதி செய்து வருகிறது. எங்களை சந்தையிலிருந்து சில மாதங்களில் நீக்கிவிடலாம் என்று நினைப்பது சாத்தியமற்றது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்