வடகொரியாவிற்கு எதிராக ஆள் சேர்க்கும் அமெரிக்கா: பணிந்தது ஜப்பான்!!
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:56 IST)
வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடும் போர் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவை அழிக்க அமெரிக்கா பல திட்டங்களை தீட்டி வருகிறது.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதனால் கடும் கோபத்தில் இருக்கும் நாடு அமெரிக்காதான்.
அணு அயுத சோதனை மற்றுமின்றி ஹைட்ரஜன் குண்டு சோதனைகளிலும் வடகொரியா ஈடுபட்டதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அமெரிக்கா பல பொருளாதார தடைகளை வடகொரியா மீது விதித்தது.
அதோடு நிறுத்தாமல் தென் கொரியாவுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டது. மேலும், இருநாட்டு ராணுவமும் இணைந்து சில பயிற்சிகளிலும் ஈடுபட்டது.
இந்நிலையில், வடகொரியாவை எதிர்க்க அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்துள்ளது. இதனால், வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா தன் பலத்தை மேலும் அதிகரித்துக்கொண்டுள்ளது.