வடகொரியா பிரச்சனை: புதின் யோசனை

வெள்ளி, 20 அக்டோபர் 2017 (11:33 IST)
உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகனை சோதனை நடத்தி வருகிறது. அன் நாட்டின் மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்தும் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வடகொரியா நடந்து வருகிறது.




இதையடுத்து தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு வடகொரியாவின் ஐ.நா.சபைக்கான துணை தூதர் கிம் இன்ரியாங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அப்பகுதிகளில் போர் மேகம் சூழ்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த பிரச்னைகள் குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறியபோது, வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்