உலகத்தை காப்பாற்ற 71 ஆயிரம் கோடி! – அள்ளிக்கொடுத்த அமேசான்!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (09:59 IST)
Jeff Bezos
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தை தீவிரமாக எதிர்கொண்டு வரும் சூழலில் அதை எதிர்த்து போராட அமேசான் நிறுவனம் நிதியளிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் முன்பை விட அதிகமாக பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பல விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தால் ஏற்பட கூடிய மாற்றங்கள் குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமேசான் நிறுவனரும், உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோஸ் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள “போசஸ் எர்த் பண்ட்” என்ற நிதியகத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம் பருவநிலை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகள், ஆய்வுகள் ஆகியவற்றுக்காக 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 71 ஆயிரம் கோடி) செலவிடப்பட உள்ளது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள ஜெப் பெசோஸ் ”போசஸ் எர்த் பண்ட் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பூமி நம் அனைவருக்கும் பொதுவானது. அதை நாம் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்