அடித்து நொறுக்கும் மழை - பள்ளிகளுக்கு விடுமுறை

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (10:59 IST)
காஷ்மீரில் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
மேலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 
 
இடைவிடாமல் பெய்து வரும் கனமழையின் காரணமாக காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்